This Article is From Apr 10, 2019

இந்தியில் 3 கதைகளுடன் காத்திருக்கும் பிரபல தயாரிப்பாளர்! ஓகே சொல்வாரா தல அஜித்?!!

இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையின் சில காட்சிகளை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பார்த்துள்ளார். இதில் அஜித்தின் நடிப்பை பார்த்து இம்ப்ரஸ் ஆன போனி, அஜித் இந்தியில் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியில் 3 கதைகளுடன் காத்திருக்கும் பிரபல தயாரிப்பாளர்! ஓகே சொல்வாரா தல அஜித்?!!

ஹைலைட்ஸ்

  • நேர் கொண்ட பார்வையின் காட்சிகளை பார்த்துள்ளார் போனி கபூர்
  • இந்தியில் அஜித்துக்காக 3 கதைகள் தயாராக உள்ளன.
  • அஜித் சம்மதிப்பார் என நம்பிக்கை தெரிவிக்கிறார் போனி.
Chennai:

இந்தியில் நடிக்க அஜித்தின் சம்மதத்திற்காக பிரபல இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் 3 அதிரடி கதைகளுடன் காத்திருக்கிறார். இதற்கு தல அஜித் ஓகே சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தியில் ஹிட்டடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் நேர் கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் அமிதாப் நடித்த வேடத்தில் அஜித் நடித்து வருகிறார். தீரன், சதுரங்க வேட்டை ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்த எச்.வினோத் நேர்கொண்ட பார்வையை இயக்கி வருகிறார். 

அஜித்தின் நடிப்புக்கு தீனிபோடும் வகையில் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் சில காட்சிகளை அதன் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பார்த்துள்ளார். இதில் அஜித்தின் நடிப்பு போனியை மிரண்டு போகச் செய்துள்ளார். 
 


இதனால் திக்கு முக்காடிப்போன போனி, ட்விட்டரில் அஜித்தை புகழ்ந்து ஸ்டேட்டஸ் தட்டியிருக்கிறார். அதில் அவர், 'நேர் கொண்ட பார்வையின் சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. அஜித்தின் நடிப்பு பிரமாதம். அவர் இந்தியில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் தயாராக இருக்கின்றன. அதில் ஒன்றிலாவது நடிப்பதற்கு அவர் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார். 

நேர்கொண்ட பார்வைக்கு இசை யுவன் சங்கர் ராஜா. பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா இந்த படத்தில் பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ம்தேதி திரைக்கு வருவதை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். போனியின் அடுத்த படத்திலும் அஜித் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். அந்தப் படம் 2020 ஏப்ரல் 10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.