This Article is From Jun 10, 2019

மும்பையில் காரில் அபாயகரமான பயணம் செய்த 3 இளைஞர்கள் கைது

வீடியோவில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மும்பையில் காரில் அபாயகரமான பயணம் செய்த 3  இளைஞர்கள் கைது

அபாயகரமான பயணம் மேற்கொண்ட இளைஞர்கள்

Mumbai:

மும்பை காவல் துறையினர் ஓடும் காரில் அபாயகரமாக ஜன்னலில் ஏறி உட்கார்ந்து  நடனம் ஆடியபடி சென்றவர்களை கைது செய்துள்ளனர்.  அதில் ஒருவர் கையில்பாட்டிலை பிடித்தபடி உட்கார்ந்து இருந்தார். இவர்களின் மீது வேகமாக கார் ஓட்டியது, அபயாகரமான முறையில் காரில் செல்வது ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபாயகரமான முறையில் பயணம் மேற்கொண்டதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மும்பை காவல்துறை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டு. வீடியோவில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

.