போவல்சனின் குடும்பம் இலங்கைக்கு விடுமுறைக்கு சென்றிருந்ததாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது..
Copenhagen: டென்மார்க்கை சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான ஆன்ட்ரேஸ் ஹோல்ச் போவல்சன் மற்றும் அவரது மனைவி தனது நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகளை ஈஸ்டர் அன்று இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் இழந்தனர் என்று போவல்சனின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்த செய்தி தொடர்பாளர் வேறு எந்த செய்தியையும் தெரிவிக்கவில்லை. ஆனால் டென்மார்க் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், போவல்சனின் குடும்பம் இலங்கைக்கு விடுமுறைக்கு சென்றிருந்ததாக கூறியுள்ளது.
இலங்கையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரம் இலங்கை மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கையிலிருந்து வெளியான புகைப்படங்களும் காட்சிகளும் மனதை மீளாத்துயரில் ஆழ்த்தும் விதமாக உள்ளன.
போவல்சன், ஒரு பேஷன் ஷாப்பின் முதலாளி என்பதும், வெரோ மோடா மற்றுன் ஜாக் & ஜான்ஸ் ஆகிய பிராண்டுகள் இவருடையது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்தின் மொத்த பரப்பளவில் 1 சதவிகிதம் இவருடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)