This Article is From Dec 12, 2019

குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம்! ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!!

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இன்டர்நெட் சேவைக்கு 48 மணிநேர தடை அசாமின் 10 மாவட்டங்களில் விதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டம்! ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!!

பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Guwahati:

குடியுரிமை திருத்த மசோதாவைக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அசாமில் வன்முறையாளர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

பதற்றம் நிறைந்த இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.  புதன்கிழமை மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன. 

அசாமில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 10 மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தடை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பதற்றம் இருக்கும் இடங்களில் போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர். 

அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி, திப்ருகருக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 

முதல்வர் சர்வானந்த சோனோவால், மத்திய அமைச்சர் ராமேஸ்வர் தேளி உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தி தொடர்பாக 10 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. 5 கம்பெனிப் படைகள் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றிலும் தலா 70 வீரர்கள் இருப்பார்கள். கவுகாத்தி நகரில் ராணுவம் சார்பாக கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டது. தின்சுகிய, திப்ருகர், ஜோரத் மாவட்டங்களில் ராணுவ ரீவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

2. அசாமின் மிகப்பெரும் நகரமான கவுகாத்தியில்தான் போராட்டம் அதிகம் காணப்படுகிறது. அங்கு காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் 10 மாவட்டங்களில் மொபைல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலின் வீட்டை போராட்டக்காரக்ள் தாக்கக் கூடும் என்பதால் திப்ருகர் வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லகிநகர் பகுதியில் போராட்டக்காரர்கள் முதல்வர் வீடு மீது கற்களை எரிந்துள்ளனர். மத்திய அமைச்சர் துலியாஜினின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. 

3. இன்று காலையில் ட்வீட் செய்த பிரதமர் நரேந்திர மோடி குடியுரிமை திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறியுள்ளார். யாரும் அசாம் மக்களின் உரிமையை பறிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். 

4. இன்று காலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் கவுகாத்தியில் போராட்டம் நடத்தினர். ஏ.ஏ.எஸ்.யு., கே.எம்.எஸ்.எஸ். மாணவர் சங்கத்தினர் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து போராட்டம் நடத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். கவுகாத்தியின் புறநகர் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

5. திப்ருகர் நகரிலிருநது புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் டிக்கெட் எடுத்தவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறியுள்ளது. இதேபோன்று மற்ற நிறுவனங்களும் விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக கூறியுள்ளார். 

6. குடியுரிமை  திருத்த மசோதாவை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் அசாம் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வன்முறை அங்கு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

7. அசாம் முதல்வரின் சொந்த ஊர் திப்ருகர். இங்குள்ள சபுவா ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் நேற்றிரவு தீயிட்டுகொளுதினர். தின்சுகியா மாவட்டத்தில் உள்ள பனிடோலா ரயில் நிலையமும் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. 

8. அண்டை மாநிலமான திரிபுராவில் இருந்து 3 கம்பெனி படைகள் அசாம் ரைபிள்சில் இருந்து வரவைழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே, திரிபுராவில்  2 கம்பெனிப் படைகள் குவிக்கப்பட்டிருந்தது.

9. இன்டர்நெட் சேவையும், அசாமில் 48 மணி நேரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திரிபுரா மாநிலத்தில் முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. 

10. மக்களவையில் குடியுரிமை திருத்த மசோதா கடந்த திங்களன்று 334 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. நேற்று மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாவிட்டாலும், மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்று மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது.

.