Heavy Rain Alert for Tamil Nadu - "கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலைஞாயிறு பகுதியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது"
Heavy Rain Alert for Tamil Nadu - வடகிழக்குப் பருவமழைக் காலம் நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும்,
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீட்பிடிக்கச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தபடுகிறது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம், மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தின், தலைஞாயிறு பகுதியில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது,” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.