மொத்தம் தயாரிக்கப்பட்ட 3 பிரமாண்ட இட்லிகளில் டிரம்ப், மோடியின் உருவப்படம் மற்றும் இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
Chennai: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்தியப் பயணத்தை வரவேற்கும் வகையில் டிரம்ப், மோடியின் உருவப் படம் பொறிக்கப்பட்ட 3 இட்லிகள் 107 கிலோ எடையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனைச் சென்னையைச் சேர்ந்த இனியவன் என்பவர் வடிவமைத்துள்ளார்.
மொத்தம் தயாரிக்கப்பட்ட 3 பிரமாண்ட இட்லிகளில் டிரம்ப், மோடியின் உருவப்படம் மற்றும் இந்தியா - அமெரிக்கா உறவுகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா வந்துள்ள டிரம்பை கவுரவிக்கும் வகையில் இந்த பிரமாண்ட இட்லிகளைத் தயாரித்திருப்பதாக இனியவன் கூறியுள்ளார்.
3 இட்லிகள் மொத்தம் 107 கிலோ எடை கொண்டவை. இதனை 6 பேர் உதவியுடன் 36 மணிநேரத்தில் உருவாக்கியதாக இனியவன் தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்துள்ளார். முதலில் அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கிய அவரை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார்.
இதன்பின்னர் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் அங்குக் காந்தியின் உடைமைகளைப் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து அகமதாபாத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மோட்டேரா மைதானத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று மோடியும், டிரம்பும் பேசினர்.
டிரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்ணர் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். நாளை இரவு இந்தியப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் அமெரிக்கா செல்லவுள்ளனர்.