This Article is From May 24, 2019

எவரெஸ்ட் உச்சிக்கு செல்லும் வழியில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் உயிரிழப்பு!

ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்டுக்கு செல்லும் வழியில் 5 முதல் 10 பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவரெஸ்ட் உச்சிக்கு செல்லும் வழியில் 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் உயிரிழப்பு!

உயிரிழப்பை நேபாள அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

KATHMANDU:

எவரெஸ்ட் உச்சிக்கு செல்லும் வழியில் 2 பெண்கள் உள்பட 3இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதனை நேபாள அரசு உறுதி செய்திருக்கிறது. இந்தாண்டு மலையேற்றத்தின்போது மொத்தம் 15 பேர் காணாமல் போனதான அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர்கள் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டின் உச்சிக்கு செல்வதை இலக்காக கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் எவரெஸ்ட் செல்வது வழக்கமாக நடைபெறும். இதற்காக நேபாள அரசின் அனுமதியை பெற வேண்டும். 

இந்தாண்டில் எவரெஸ்ட் பயணம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்று சுமார் 120 பேர் உச்சிக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிலருக்கு மூச்சுத் திணறல், நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்டவை ஏற்பட்டது. 

இதில் புனேவை சேர்ந்த நிகால் அஷ்பாக் பகவான் (27), மும்பையை சேர்ந்த அஞ்சலி சரத் குல்கர்னி (54), ஆகியோர் உயிரிழந்தனர். இதேபோன்று ஒடிசாவை சேர்ந்த கல்பனா தாஸ் என் 49 வயது பெண்ணும் உயிரிழந்தார். இதற்கான காரணம் தெரியவரவில்லை. 

உயிரிழப்பை நேபாள அரசு உறுதி செய்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்டுக்கு செல்லும் வழியில்  5 முதல் 10 பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

.