Fire at ONGC Plant: இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது ஓ.என்.ஜி.சி.
New Delhi: ONGC Fire: மும்பைக்கு அருகேயுள்ள உரான் என்ற இடத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி அரசு நிறுவனத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் இருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஓ.என்.ஜி.சி ஆலையைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் யாரையும் அனுமதிக்காத வண்ணம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் அதைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஓ.என்.ஜி.சி நிறுவனம், “உரான் ஆலையில் இருக்கும் வாட்டர் ட்ரெயினேஜில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. 2 மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்களால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஓ.என்.ஜி.சி-யின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் தீ விபத்து முறையாக கையாளப்பட்டது” என்று ட்விட்டர் மூலம் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது ஓ.என்.ஜி.சி. உள்நாட்டுத் தேவையில் சுமார் 70 சதவிகிதத்தை அந்த நிறுவனம் பூர்த்தி செய்கிறது.