குல்ஷன் தாஸ், மனைவி சுனிதா மற்றும் அவரது தாய் காம்தா ஆகியோர் பிளாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
New Delhi: டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி வளாகத்திற்குள் வசிக்கும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயுடன் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற காவல்துறையினர் இறந்தவர்களின் மற்ற குடும்ப நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
குல்ஷன் தாஸ், மனைவி சுனிதா மற்றும் அவரது தாய் காம்தா ஆகியோர் பிளாட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் குல்ஷனும் சுனிதாவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமண் செய்து கொண்டவர்கள். அவர்களின் சொந்த ஊரான ஹரியானாவிற்கு தகவல் அளிக்கப்பட்டன.