கேரளாவில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் புதுவையிலும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கர்நாடகாவின் உள்ளே அமைந்திருக்கும் இடங்கள், கடலோர ஆந்திரா ஆகிய இடங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கொங்கன், கோவா, மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இடங்களில் மின்னல், பலத்த இடியுடன் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
லட்சத்தீவு பகுதிகளிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி சுமார் 480 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.