24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
ஹைலைட்ஸ்
- ஜம்மு-காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
- ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதி உட்பட 3 பேர் சுட்டுக்கொலை
- கொல்லப்பட்ட அந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி வெடிகுண்டு நிபுணர் ஆவார்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்த போது, மூன்று பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்த என்கவுண்டரானது, சோபியான் மாவட்டம் அம்ஷிபோரா கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
அம்ஷிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, தேடுதல் வேட்டை என்கவுண்டராக மாறியுள்ளது.
இதேபோல், குல்காமில் நடந்த தேடுதல் வேட்டையின் போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதி உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு நடந்த 24 மணி நேரத்தில் இன்றும் என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது.
கொல்லப்பட்ட அந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி வெடிகுண்டு நிபுணர் ஆவார். இவர் தான் சமீபத்தில் நடந்த அனைத்து வெடிகுண்டு தாக்குதல்களுக்கும் முக்கியமானவராக விளங்கப்படுகிறார்.
இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமதுவைச் சேர்ந்தவர்கள், அவரது பாகிஸ்தானிய பயங்கரவாதிகளிடமிருந்து நேரடி அறிவுறுத்தல்களைப் பெறும் வெடிகுண்டு நிபுணர் என அறியப்படும் ஒரு பயங்கரவாத தளபதியும் அடங்குவதாகவும், சமீபத்திய காலங்களில் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான பல வெடிகுண்டு தாக்குதல் முயற்சிகள் உட்பட ஏராளமான தாக்குதல்களுக்கு அவர் காரணமாக இருந்தாகவும் கூறப்படுகிறது. அவர் 3/4 என்கவுண்டர்களில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாக்நாத் பகுதியில் நடந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது, 3 பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு அமர்நாத் யாத்திரையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.