This Article is From Mar 09, 2020

கேரளாவில் 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

குடும்பத்துடன் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்குக் கொச்சி விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது

கேரளாவில் 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கேராளவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி
  • ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • ஏற்கனவே கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
New Delhi/Thiruvananthapuram:

கேரளாவில் 3 வயதுக் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 

குடும்பத்துடன் இத்தாலி சென்று திரும்பிய 3 வயதுக் குழந்தைக்குக் கொச்சி விமான நிலையத்தில் நடந்த சோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அந்த குழந்தை தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதேபோல், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த மாதம் சீனாவின் வூஹானிலிருந்து கேரளம் திரும்பிய மருத்துவ படிப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, அவர்கள் மூவரும் சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பிவிட்டனர். 

இந்நிலையில், கேரளாவில் புதிதாக 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா நேற்று தெரிவித்தார். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவார்கள். அவர்களில் மூவர் இத்தாலிக்குச் சென்று வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

வெனிஸ் நகரிலிருந்து கத்தாரின் தோஹா நகருக்குக் கடந்த மாதம் 29-ஆம் தேதி சென்ற அவர்கள், அங்குள்ள விமான நிலையத்தில் சுமார் ஒன்னரை மணி நேரம் இருந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து கொச்சிக்கு மார்ச் 1ம் தேதி விமானத்தில் வந்தனர். எனினும், தாங்கள் இத்தாலியிலிருந்து வந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் மறைத்துவிட்டனர். இதன் மூலம் விமான நிலையத்தில் மருத்துவப் பரிசோதனையைத் தவிர்த்துவிட்டனர் என்று ஷைலஜா கூறியிருந்தார்.

.