இந்தியன் ரோட் காங்கிரஸ் மாநாட்டில் கர்நாடக முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பேசிய காட்சி.
Nagpur: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்படும் திட்டம் நிறைவு பெற்று விடும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இந்தியன் ரோட் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் பேசியதாவது-
முதல் அமைச்சர் கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெற்று விடும். இதற்காக ஆசிய மேம்பாட்டு வங்கி 95.5 சதவீத அளவுக்கு கடன் உதவி செய்திருக்கிறது.
நாக்பூர் - மும்பை எக்ஸ்ப்ரஸ் சாலையில் 22 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். இதனால் மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இதனை தவிர்த்து 24 மாவட்டங்களை இந்த எக்ஸ்ப்ரஸ் சாலை இணைக்கும்.
நரிமன் பாயின்ட்டில் இருந்து வோர்லி வரைக்கும் கடலோரத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு டச்சு வங்கி நிதியுதவி செய்துள்ளது.
இவ்வாறு பட்னாவீஸ் தெரிவித்தார்.