This Article is From Jun 15, 2019

மேற்குவங்கத்தில் 300 அரசு மருத்துவர்கள் ராஜினாமா! - மம்தாவை சாடும் மத்திய அரசு!

இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட இந்திய முன்னணி மருத்துவர்கள் திங்களன்று போராட்டம் அறிவித்துள்ளனர்.

வெள்ளியன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Kolkata/New Delhi:

கொல்கத்தாவில் ஜூனியர் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து, 300 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 17ஆம் தேதி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

முன்னதாக, நேற்று கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்படும் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஜூனியர் மருத்துவர்களை நேரில் சந்தித்த மம்தா பானர்ஜி, பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினார். எனினும், மருத்துவர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும், 'தங்களுக்கு நியாம் வேண்டும்' என குரல் எழுப்பி, போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதைத்தொடர்ந்து, நோயாளிகள் தவிர்த்து, மற்றவர்கள் யாரும் மருத்துவமனை வளாகத்தில் இருக்க அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு மம்தா வலியுறுத்தினார். மேலும், இது குறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் விடுதியில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தில், அரசு மருத்துவமனை ஜூனியர் மருத்தவர்கள் நடத்தும் போராட்டத்தில் சீனியர் மருத்துவர்களும் கலந்து கொண்டுள்ளதால், அம்மாநிலத்தில் உள்ள மொத்த அரசு மருத்துவமனை சேவைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க ஜூனியர் மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டிருக்கும், அவசர சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல், திறந்திருக்கும், எனினும், மருத்துவர்களின் வருகை குறைவால், அந்த சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்தவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக மாநில அரசு உத்தரவாதம் அளித்தபோதிலும், மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட மறுத்துள்ளனர்.

இதனிடையே மம்தா நேரில் சென்று பார்வையிட்ட போது, அவரை அங்கிருந்த மருத்துவர்கள் தவறாக பேசி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனை தான் மன்னித்து விட்டதாக மம்தா தெரிவித்தார்.

.