This Article is From Apr 13, 2020

இந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு!

அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று முதல் தங்களது அமைச்சரவை பணிகளை தொடர்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு!

இந்தியாவில் கொரோனா: 24மணி நேரத்தில் 35 பேர் பலி: பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9000ஆக உயர்வு
  • கொரோனா பாதிப்புக்கு மொத்தமாக 308 பேர் உயிரிழந்துள்ளனர்
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது, 9,152 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அடங்கிய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு இன்று முதல் தங்களது அமைச்சரவை பணிகளை அலுவலகம் வந்து தொடர்கின்றனர். இதனிடையே, கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில், 15 பேருக்கு அதிகமாக வைரஸ் பாதிப்பு இருந்தால், அது சிவப்பு மண்டலமாக பிரிக்கப்படும். அதற்கும் கீழ் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலமாக பிரிக்கப்படும், இதுவரை வைரஸ் பாதிப்பு பதிவாகாத பகுதிகள் பச்சை மண்டலமாக பிரிக்கப்படும். 

இதைத்தொடர்ந்து, நாட்டில் சரிபாதி மாவட்டங்கள் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் மாறக்கூடும் என தெரிகிறது. இதுதொடர்பாக நேற்று வெளிவந்த தகவலில், நாட்டில் உள்ள பாதி மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது வரை 364 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது, மார்ச் 29ம் தேதி 160ஆக இருந்தது, ஏப்ரல் 6ம் தேதி 284ஆக இருந்தது. 

முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று கிட்டதட்ட 13 மாநில முதல்வர்களுடன் 4 மணி நேரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களாக மகாராஷ்டிரா (1,985) டெல்லியில் (1,154) தமிழ்நாடு (1,075) ராஜஸ்தான் (804), மத்திய பிரதேசம் (532) குஜராத்தில் (516) ஆக உள்ளது. 

டெல்லியில் புதிதாக 10 இடங்கள் கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மொத்தமாக அங்கு 43 இடங்கள் ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

அரசு சார்பில் வாகன வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ள அதிகாரிகள், உயர் அதிகாரிகள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வழக்கம்போல் வருவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஒவ்வொரு அமைச்சகமும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்த யோசனைகளை அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,514 பேர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இதேபோல், உலகளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 5,55,313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வருடம் சீனாவின் வுஹானில் உருவான இந்த வைரஸால் தற்போது உலகளவில் 15 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 

.