Read in English
This Article is From Jun 29, 2020

மேற்குவங்க கடற்கரையில் கரை ஒதுங்கிய 35 அடி நீள திமிங்கலம்!

மந்தர்மணி வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது வங்காளத்தின் மற்றொரு சுற்றுலா பகுதியான திகாவுக்கு அருகில் உள்ளது.

Advertisement
இந்தியா Edited by

மேற்கு வங்காளத்தின் மந்தர்மணி கடற்கரையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

Kolkata:

கொல்கத்தாவிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ள மேற்கு வங்காளத்தின் மந்தர்மணி கடற்கரையில் 35 அடி திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது போல சம்பவம் இதுவே முதல் முறையென உள்ளூர் மக்கள் குறிப்பிட்டுள்ளனர். திமிங்கலம் கரையொதுங்கிய பகுதியில் ரத்தம் குளம் போல் தேங்கியுள்ளது. இதனை காண உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். இறந்த திமிங்கலத்தின் வால் பகுதியில் சில காயங்கள் ஏற்பட்டுள்ளது.

திமிங்கலத்தின் மாபெரும் தலை இரத்தக் குளத்தில் கிடந்தது.

இந்த சம்பவத்தை அறிந்த கிழக்கு மிட்னாபூர் மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். வன மற்றும் வனவிலங்கு மற்றும் மீன்வளத் துறைகளின் அதிகாரிகளையும் வரவழைத்துள்ளனர்.

மந்தர்மணி வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது வங்காளத்தின் மற்றொரு சுற்றுலா பகுதியான திகாவுக்கு அருகில் உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement