Uttarakhand: உத்தரகண்ட் : உத்தரகண்ட் மாநிலம் பிபாலி-போவான் சாலையில் மினி பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 35 பேர் பலியாகினர்
உத்ரகண்ட் மாநிலம் ராம் நகர் பகுதியில் இருந்து போவான் சென்று கொண்டிருந்த மினி பேருந்து, 45 பயணிகளுடன் பள்ளத்தில் சரிந்து விழுந்தது. அதில் 35 பேர் பலியானதாகவும், நான்கு பேர் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
விபத்திற்கான உண்மை காரணங்கள் கண்டறியப்படவில்லை. மேலும், விபத்தில் பலியானோரின் குறிப்பிட்ட எண்ணிக்கை சரியாக தெரியவில்லை. பேருந்து பள்ளத்தில் சரிந்து விழுந்ததில், பலரும் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
காயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பயணிகள் தீவிர காயங்களுடன் இருப்பதால் உயிரிழ்ப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கார்வால் காவல் துறை ஆணையாளர் டிலிப் ஜவல்கார் தெரிவித்தார்.