This Article is From Jan 13, 2020

"35 சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்’’ – பாஜக தகவலால் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானே, உத்தவ் தாக்கரே அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். உத்தவ் அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதைக்குள் அந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை என்று கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரேயின் அரசு செயல் திறனுடையதாக இல்லை என்று நாராயண் ரானே கூறியுள்ளார்.

Thane:

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் கட்சியின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவருமான நாராயண் ரானே கூறியுள்ளார்.

மாநிலங்களவை எம்.பி.யான ரானே, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு செயலற்ற தன்மையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அரசை நிர்ணயிக்க சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் 5 வாரத்திற்கும் அதிகமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதை ரானே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

மகாராஷ்டிராவில் பாஜக எப்படியும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடும். பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். சிவசேனாவில் 56 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்களில் 35 பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

உத்தவ் அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது ஒரு மாயை என்று குறிப்பிட்டுள்ள அவர், எப்போதைக்குள் அந்த திட்டம் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று எந்த விளக்கமும் இல்லை/,

அவுரங்காபாத்துக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே வந்து சென்றுள்ளார். ஆனால் அந்த பகுதிக்கு எந்தவொரு திட்டத்தையும் அவர் அறிவிக்கவில்லை..

இதுபோன்ற அரசிடம் இருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?. எப்படி ஆட்சி செய்வது என்று சிவசேனாவுக்கு தெரியாது. ஆட்சியமைக்கவே அவர்கள் 5 வாரத்திற்கும் அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டார்கள். இதிலிருந்தே அவர்கள் எப்படி ஆட்சியை நடத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ராஜ் தாக்கரே பாஜகவில் சேர்கிறாரா என்ற பேச்சு எழுகிறது. இதுபற்றி பாஜக தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.