This Article is From Feb 25, 2019

அமேசான் காட்டில் இறந்து மிதந்த 36 அடி திமிங்கலம்!

சமூக வலைதளங்களில் இந்த திமிங்கலத்தின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். 

அமேசான் காட்டில் இறந்து மிதந்த 36 அடி திமிங்கலம்!

அமேசான் காடுகளில் 36 அடி நீள திமிங்கலம் என்று இறந்து கிடந்துள்ளது.

அமேசான் காடுகளில் 36 அடி நீள திமிங்கலம் என்று இறந்து கிடந்துள்ளது. இது சுற்றுச்சூழல் ஆரவலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏபிசி செய்திகளின் படி பிரேசிலின் மாஜிரோ தீவு பகுதியில் அமேசான் நதியின் முகப்பில் கடலிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் இறந்து கிடந்துள்ளது. 

மஜரோ தீவுகளில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனம் கூறும் போது, "இந்த திமிங்கலம் செத்து தான் கரை ஒதுங்கியுள்ளது. மாங்குரோவ் பகுதிகளின் உயர் அலைகளில் இது கரை ஒதுங்கியிக்க வாய்ப்புள்ளது" என்று கூறுகின்றனர். 

"இது பெரிய திமிங்கலம் அல்ல... குறைந்த வயதுடையது இன்னும் சொல்லபோனால் குழந்தை திமிங்கலம்" என்று கூறியுள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bicho D'água (@bicho_dagua) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bicho D'água (@bicho_dagua) on

தி சன் பத்திரிக்கையில் கடல் ஆய்வாளர் ரெனெட்டா கூறும்போது, "இது எப்படி இங்கு வந்தது என்று தெரியவில்லை. இது கடலின் மிக அருகில் மிதந்து வந்திருக்கிறது. இதனை எடுத்து மாங்குரோவ் பகுதிகளில் புதைத்துள்ளோம்" என்றார்.

சமூக வலைதளங்களில் இந்த திமிங்கலத்தின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த ஆய்வுகளையும் செய்து வருகின்றனர். 

Click for more trending news


.