This Article is From Mar 25, 2020

ஊரடங்குக்கு நடுவே 80 கி.மீ நடந்த தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் தத்தம் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில், லக்னோவில் வெயிலேறிய மத்திய பொழுதில் கால்நடையாக 36 மணி நேரப்பயணத்திற்கு ஆயத்தப்பட்டிருந்தது ஒரு குழு.

ஊரடங்குக்கு நடுவே 80 கி.மீ நடந்த தொழிலாளர்கள்

India Coronavirus Lockdown:: It could only get worse as labourers continue their long walk home

Lucknow:

லக்னோ: கொடிய கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் தங்கள் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தது. முன்னதாக கடந்த ஞாயிறு அன்று இதற்கான முன்னோட்டமாக சுய ஊரடங்குக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்த சுய ஊரடங்கினை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பின்னர் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னணியில் மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தன. இந்த நிலையில் அத்தியாவசியமற்ற பிற தனியார் நிறுவனங்கள் விடுப்பு விடுத்திருந்தன. இதன் தொடர்ச்சியாகத் தேசிய அளவில் ரயில் சேவைகளும் மாநில அளவில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன. ஆமலும், செவ்வாய்க் கிழமை பேசிய தேசிய பிரதமர் இந்த ஊரடங்கு 21 நாட்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் தத்தம் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இப்படியான சூழலில், லக்னோவில் வெயிலேறிய மத்திய பொழுதில் கால்நடையாக 36 மணி நேரப்பயணத்திற்கு ஆயத்தப்பட்டிருந்தது ஒரு குழு.

20 வயதான அவதேஷ் உன்னாவோவில் உள்ள தனது தொழிற்சாலையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 80 கி.மீ தூரத்தில் உள்ள பரபங்கியில் உள்ள தனது கிராமத்திற்கு நடக்கத் தொடங்கியுள்ளார். சீல் வைக்கப்பட்ட மாநில எல்லைகளை கடக்கும்போது போலீசாரால் நிறுத்தப்படாவிட்டால் மட்டுமே அவர் வியாழக்கிழமை அதிகாலையில் அவருடைய கிராமத்தை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ucjmm0so

ஏறக்குறைய 36 மணி நேர இந்த பயணம் சில இடைவெளிகளுடன் கிட்டத்தட்ட இடைவிடாது இருக்கும். அவதேஷ் பணிபுரியும் நிறுவனத்தில் 20 பேர் பணிபுரிவதாகவும், அவர்களுடன் முதியவர்களும் பணியாற்றியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"நான் இதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் எனக்கு வேறு வழியில்லை" என்று அவதேஷ் கூறுகிறார், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வீட்டிற்குச் செல்வதற்குப் பதிலாக தங்க வைக்குமாறு பிரதமர் மோடியின் வேண்டுகோளைப் பற்றி கேட்டபோது, மாநிலங்கள் தங்கள் தேவைகளை கவனித்துக்கொள்வார்கள் என்ற உறுதியுடன் தான் பயணிப்பதாக அவதேஷ் குறிப்பிடுகிறார்.

 மேலும்,  "நான் எப்படி தங்கியிருக்க முடியும்? நான் உன்னாவோவில் ஒரு ஸ்டீல் ஃபேப்ரிகேஷன் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அவர்கள் எங்களை எங்கு வைத்தாலும் நான் தங்கியிருக்கிறேன். நேற்று இரவு நிர்வாகம் என்னை வெளியேறச் சொன்னது. இங்கே தங்க முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். எனவே எனக்கு என்ன வழி இருக்கிறது. போக்குவரத்து இல்லை. எனவே அதே கிராமத்தைச் சேர்ந்த எங்களில் சிலர் நடக்க முடிவு செய்தோம் "என்று அவதேஷ் என்.டி.டி.வியிடம் குறிப்பிட்டிருக்கிறார்.

கொரோனா வைரஸின் பரவலை சரிபார்க்க முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிநிறுத்தம் என்பது முறைசார துறையில் லட்சக்கணக்கானவர்களை எந்தவிதமான தங்குமிடம், போக்குவரத்து அல்லது சம்பாதிப்பதற்கான வழிமுறைகள் இல்லாமல் தவிக்கவிட்டிருக்கின்றது. யாரும் பசியோடு இருக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது, ஆனால் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒரு இடம் கூட இல்லாமல், ஒரே இரவில் விடப்பட்டுள்ளனர்.

குழுவில் உள்ள 50 வயது மதிக்கத்தக்க ராஜ்மல் "எங்கள் கிராமத்தில் சில உணவுகள் உள்ளன, ஆனால் எனது வருமானம் எனது குடும்பத்தைத் வாழ வைக்கிறது. என்னைப் போன்றவர்களுக்கு உ.பி. அரசாங்கத்தின் ரூ .1,000 மாத ஊதியத் திட்டம் பற்றி கேள்விப்பட்டேன், ஆனால் நான் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. யாரும் என்னிடம் வரவில்லை. அது எங்களைப் போன்றவர்களுக்கு இது உறுதியற்றதாக தெரிகிறது, "என்று குறிப்பிட்டுள்ளார்.

குழுவானது துணி, தண்ணீர் மற்றும் சில பிஸ்கட்டுகளுடன் ஒரு பையை சுமந்துகொண்டு செல்கிறது. வெயிலிலிருந்து பாதுகாக்க துண்டுகள் தலையில் சுற்றப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5,600 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 14,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.