அதிமுக எம்.பி.விஜிலா சத்யானந்த் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில் அளித்தார்.
New Delhi: சிறுவர்களை ஆபாசமாக காட்டிய 377 இணைய தளங்களை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
கேள்வி நேரத்திற்கு பிந்தைய நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், அவர்களை மையப்படுத்தி வெளி வரும் ஆபாச காட்சிகளைக் கொண்ட இணைய தளங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாச காட்சிகள்தான் அவர்களுக்கு எதிரான குற்றங்களை செய்வதற்கு தூண்டு கோலாக அமைகின்றன என்றும் விஜிலா குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 377 ஆபாச இணைய தளங்கள் முடக்கப்பட்டிருப்பதகாவும், இது தொடர்பாக 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்தார்.
இதேபோன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு துறை சார்ந்த மத்திய அமைச்சர்கள் பதில் அளித்தார்கள்.