Read in English
This Article is From Aug 18, 2018

கேரள வெள்ளம்: 38 ஹெலிகாப்டர்கள், நூற்றுக்கணக்கான படகுகள் மீட்புப்பணிகளில் தீவிரம்

கேரளத்தில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதுவரை 324 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர்.

Advertisement
இந்தியா

7000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6000 பேர் உதவிக்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Kochi/Thirvananthapuram :

கேரளத்தில் கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதுவரை 324 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். முப்படைகளும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து 1300 வீரர்கள் வரை மீட்புப்பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோரைக் காப்பாற்றும் பணியிலும் அவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் பணியிலும் 38 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீட்பு உபகரணங்கள் இதர பொருட்களைக் கொண்டு சென்று சேர்க்கும் பணியில் 20 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொங்கி ஓடும் ஆறுகளால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் பலரும் மார்பளவு தண்ணீரில் தத்தளித்தபடி தங்கள வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். வீட்டு மாடிகளில் சிக்கித் தவிப்போர் உதவிக்கு ஹெலிகாப்டர்களைக் கோரி கையசைக்கும் காட்சிகளையும் காணமுடிகிறது.
 

சில பகுதிகளில் ஹெலிகாப்டர் விமானங்கள் மூலம் மீட்பது ஒன்றே வழி, ஆயிரக்கணக்கானோர் இன்னும் தனித்துவிடப்பட்டுள்ளனர் என்று முதல்வர் பிணராயி விஜயன் கவலை அடைந்திருப்பதோடு மீட்புப் படையினர் மேலும் தீவிரமாக மக்களைக் காப்பாற்றுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்புத்துறை அமைச்சருடன் இன்று காலை பேசியபோது மேலும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று வலியுறுத்தியுள்ளேன். மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலும் 11 ஹெலிகாப்டர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்” என்று அவர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

Advertisement

7000 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6000 பேர் உதவிக்காகக் காத்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

790 வீரர்கள் அடங்கிய இராணுவத்தின் பத்து வரிசைப் படைகளும் பத்து பொறியாளர் படைகளும் மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 82 கடற்படை, 42 கடலோரக் காவற்படை அணிகளும் ஐந்து துணை இராணுவப் படைகளும் இவர்களுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இதனிடையே மாநிலத்தின் பல பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து அதிக சேதம் ஏற்படுத்தாத வகையில் படிப்படியாக நீரைத் திறந்துவிட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஆறுகள் வரலாறு காணாத பருவமழையினால் கேரளாவில் நிரம்பியுள்ளன. நாளை மழையின் தீவிரம் சிறிது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement