Read in English
This Article is From Sep 17, 2020

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?

தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.

Advertisement
இந்தியா ,
New Delhi:

இதுவரை, 382 மருத்துவர்கள் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர் என்று இந்திய மருத்துவ சங்கம் வெளியிடப்பட்ட பட்டியலில் தெரிவித்துள்ளது.

முன்னதாக கொரோனா தடுப்பு பணியில் இருந்து உயிரிழந்த மருத்துவர்கள் குறித்து எவ்வித தகவல்களையும் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவதன் மற்றும், சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர்  அஸ்வினி குமார் சௌபே ஆகியோர் நாடாளுமன்றத்தில் அறிவிக்காதது மருத்துவ சங்கத்தினை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலங்களின் கீழ் வருவதால் மத்திய அரசிடம் எந்த இழப்பீட்டுத் தகவலும் இல்லை என்ற மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் தனது அறிக்கையில் தெரிவித்திருந்ததை மருத்துவ சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது. “இது எங்கள் மக்களுக்கு ஆதரவாக நின்ற தேசிய வீராங்கனைகளை கடமையாக்குவதற்கும் கைவிடுவதற்கும் சமம்.” என மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

Advertisement

முன்னதாக இதே போல புலம் பெயர் தொழிலாளர்கள் உயிரிழப்பு குறித்து எவ்வித தகவல்களும் இல்லையென மத்திய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement