பாலு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
Palu, Indonesia: இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாலு என்கிற நகரத்தில் சுனாமி வந்துள்ளது. ஏ.எஃப்.பி செய்தி ஊடகம் இதை உறுதி செய்துள்ளது
நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது. ஆனால், அந்த எச்சரிக்கையை வானிலை மையம் திரும்பப் பெற்றது. ஆனால் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட பிறகுதான் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படுள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் 384 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தோனேசியா பேரிடர் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், பாலு பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.