கிரேஷ் நகரில் உள்ள தொழிற்துறை பூங்காவில் ட்ரக்கில் கண்டுபிடிக்கப்பட்டது.
London: லண்டனில் ட்ரக் ஒன்றில் 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ட்ரக் அயர்லாந்தில் இருந்து வந்துள்ளது. 25 வயதான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இங்கிலாந்தின் எசெக்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஷ் நகரில் உள்ள தொழிற்துறை பூங்காவில் ட்ரக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாலை 1.40 மணியளவில் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக காவல்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இறந்தவர்கள் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதில் 38 பேர் வயது வந்தோர் மற்றும் ஒரு டீன் ஏஜர் என்று தெரியவந்துள்ளது.
எசெக்ஸ் மாகாண் காவல்துறையோ சீன தூதரகமோ இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.