This Article is From Aug 17, 2018

கடும் வெள்ளத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் கடும் போராட்டம்

கேரளாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர்

கடும் வெள்ளத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் கடும் போராட்டம்
New Delhi:

கேரளாவில் இதுவரை 4000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், 44 பேரை வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. மேலும், நிலச்சரிவால் சாலை துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை என்று அவர்கள் கூறினர்.

கேரளாவில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் பல்வேறு இடங்களில் 100 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.

51 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் 2 குழுக்கள் களத்தில் இறங்க உள்ளதாக, தேசிய பேரிடர் மீட்பு படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு இருந்த போதிலும் தங்களால் முடிந்த வரை மீட்புப் பணிகளை செய்து வருவதாகவும், சாலை துண்டிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

.