This Article is From Jun 27, 2020

ஜம்மு காஷ்மீரில் நில நடுக்கம்! கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

நேற்று மேகாலயா மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள துராவில் 79  கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
இந்தியா

ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நில நடுக்கம் பதிவானது.

Highlights

  • ஜம்மு காஷ்மீரின் ஹன்லே பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது
  • கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
  • ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் 4.4. ஆக பதிவாகியுள்ளது
Srinagar (Jammu and Kashmir):

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. வீடுகள்,  கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஜம்மு காஷ்மீரின் வடகிழக்கு பகுதியான  ஹன்லேயில் நில  நடுக்கம் உண்டானது. இந்த பகுதி தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 332 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையின்படி, நண்பகல் 12.32க்கு நில  நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹன்லே மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மக்கள் அதிர்வை உணர்ந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக இந்த நில நடுக்கம் பதிவானது. இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்த விவரங்களை அரசு இன்னும் வெளியிடவில்லை.

Advertisement

முன்னதாக  நேற்று மேகாலயா மாநிலம் மேற்கு பகுதியில் உள்ள துராவில் 79  கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது  ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement