This Article is From Oct 07, 2018

ஜம்மு – காஷ்மீரில் மிதமான நில நடுக்கம்

அதிர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பேரிடர் மீட்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்

ஜம்மு – காஷ்மீரில் மிதமான நில நடுக்கம்

ஜம்மு காஷ்மீரில் காலை 8.09-க்கு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Srinagar:

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 – ஆக பதிவான இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று காலை சரியாக 8.09-க்கு நில நடுக்கம் ஏற்பட்டது. அட்ச ரேகை 36.7 வடக்கு மற்றும் தீர்க்க ரேகை 74.5 கிழக்கு ஆகியவற்றுக்கு இடையே உள்ள பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன. சுமார் 206 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு கடந்த 2005-ல் ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

.