நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து சிறுமிகள் ரயில் ஏறியதாக பெற்றோர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். (Representational)
New Delhi:
டெல்லியில் பாலிவுட்டில் நடிக்க செல்வதாக வீட்டை விட்டு ஓடிய 4 பதின்ம வயது பெண்களை காவல்துறையினர் சூரத்திலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல்துறை மகளிர் குழு தெரிவித்துள்ளது.
ஜூலை 3 ஆம் தேதி கிராரியில் இருந்து 15-17 வயது மைனர் பெண்க காணாமல் போயுள்ளனர்.
பெற்றோர்கள் பிரேம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த்துள்ளனர். அதனடிப்படையில் டெல்லி காவல்துறையினருடன் டிசி டபுள்யூ ஆலோசகர்கள் மற்றும் மஹிலா பஞ்சாயத்து மகளிர் குழுவும் இணைந்து இந்த தேடலை முன்னெடுத்துள்ளது.
நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து சிறுமிகள் ரயில் ஏறியதாக பெற்றோர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
ரயில்நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்த பின்னர், மும்பை காவல்துறைக்கு சிறுமிகளின் புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களுக்கு அனுப்பியது. பின்னர் தேடல் வேட்டை நடந்தது. ஜூலை 19 அன்று சிறுமிகளில் ஒருவர் தனது குடும்பத்தினரை அணுகி, அவர்கள் மீண்டும் டெல்லிக்கு வர விரும்புவதாகவும் தற்போது சூரத்தில் இருப்பதாகவும் கூறினார்.
அதன்பின் காவல் துறையினர் அந்த சிறுமிகளை மீண்டும் டெல்லிக்கு அழைத்து வந்துள்ளனர். சிறுமிகள் சூரத்தில் ஒருவரிடம் பாதுகாப்பாகவே இருந்துள்ளனர். சிறுமிகளை விசாரித்த போது அந்த நபர் தங்களை எந்த வகையிலும் தொல்லை தரவில்லை என்றும் மீண்டும் பெற்றோரிடமே போக வேண்டுமென அறிவுரை கூறியதாக தெரிவித்தனர்.