ஹைலைட்ஸ்
- உடற்பயிற்சிக்கு பின் புரோட்டீன் ஷேக் குடித்து வரலாம்.
- இதனால் தசைகள் உறுதியாக இருக்கும்.
- பசியை போக்கி உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க புரோட்டீன் ஷேக் குடிக்கலாம்.
உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியமானது. உடற்பயிற்சி செய்த பின் இழந்த கலோரிகளை பெற புரதம் நிறைந்த பானங்களை குடித்து வரலாம். இதனால் தசைகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் சீராக இருக்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையும் விரைவில் குறையும். உடல் எடை குறைக்க புரதம் அத்தியாவசியமான சத்து. உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் பசியை போக்க இந்த புரோட்டீன் ஷேக் உதவுகிறது. புரோட்டின் ஷேக்களை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரிக்கலாம்.
1. வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி:
வாழைப்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியமான புரோட்டீன் ஷேக் தயாரிக்கலாம். ஒரு வாழைப்பழம், ஒரு கப் பால், அரை கப் ஸ்ட்ராபெர்ரி, கால் கப் கிரீக் யோகர்ட், ஒரு மேஜைக்கரண்டி தேன் ஆகியவற்றை சேர்த்து அரைத்து குடித்து வரலாம். இது உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கிறது.
2. வாழைப்பழம் மற்றும் பீனட் பட்டர்:
இரண்டு வாழைப்பழங்கள், இரண்டு கப் கிரீக் யோகர்ட், இரண்டு மேஜைக்கரண்டி பீனட் பட்டர், ஒரு மேஜைக்கரண்டி சியா விதை, 100 மில்லி பால் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து குடித்து வரலாம். இத்துடன் நீங்கள் விரும்பினால் கோகோ பவுடர் சேர்த்து கொள்ளலாம். சுவையாக இருக்கும்.
3. ஓட்மீல் மற்றும் ப்ளூபெர்ரி:
புரோட்டீன் ஷேக் தயாரிக்க ஓட்மீல் பயன்படுத்தலாம். அரை கப் ப்ளூபெர்ரி, ஒரு மேஜைக்கரண்டி சியா விதை, 2 மேஜைக்கரண்டி ஓட்மீல், ஒரு கப் பால், ஒரு மேஜைக்கரண்டி தேன் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். உடற்பயிற்சி முடித்த பின் இந்த புரோட்டீன் ஷேக்கை குடித்து வரலாம்.
பெர்ரி ஆரஞ்சு:
ஒரு வாழைப்பழம், ஒரு கப் ப்ளூபெர்ரி, ஒரு ஆரஞ்சு, கால் கப் ஓட்ஸ், கால் கப் கிரீக் யோகர்ட் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து வித்தியாசமான சுவை கொண்ட இந்த புரோட்டீன் ஷேக்கை குடித்து வரலாம்.