Manali recorded a maximum temperature of 10.8 degrees on Monday.
இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மணாலி -சோலாங்- நல்லா பாதையில் 4 கி.மீ நீளமுள்ள போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன இயக்கம் மந்தமாகியுள்ளது.
லஹால்-ஸ்பிட்டி மாவட்டத்தில் மணாலி-கீலாங் பாதையில் போக்குவரத்து இயக்கம் நேற்று முந்தினம் தொடங்கப்பட்டது. கிலாங்-குலு இடையே பஸ் சேவையை மாநில போக்குவரத்து துறை இன்று மீண்டும் தொடங்கும். குலு பள்ளத்தாக்கு பிரபலமான மலைவாசஸ்தலமான குலு மற்றும் மணாலியைக் கொண்டுள்ளது.
மணாலியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பனிப்பொழிவு தொடங்கியது. மலை நகரத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. குலாபா, சோலாங் மற்றும் கோதி ஆகிய இடங்களில் மிதமான பனி பெய்கிறது. கின்னர் மாவட்டத்தில் உள்ள கல்பா மற்றும் லஹால் &ஸ்பிட்டியில் உள்ள கீலாங் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு கூடுதலாக உள்ளது.
குளிர்ந்த அலை வட இந்தியாவைத் தொடர்ந்து கொண்டு வருவதால் மணாலி அதிகபட்சமாக 10.8 டிகிரி செல்சியல் வெப்ப நிலை பதிவுவாகியுள்ளது.
கின்னர் மாவட்டத்தில் கல்பா மைனஸ் 2.9 டிகிரி செல்சியஸையும் குலு மணாலி மற்றும் பூந்தர் முறையே மைனஸ் 3 மற்றும் மைனஸ் 0.8 டிகிரி செல்சியஸையும் பதிவு செய்ததாக சிம்லா வானிலை இயக்குநர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்ப நிலை 8.3 டிகிரியாக பதிவானது. 1997க்குப் பிறகு டிசம்பரில் அதிக பனி குறைந்த ஆண்டாக இந்த ஆண்டு உள்ளது என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.