This Article is From Jan 25, 2019

2021-ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் 4 லட்சம்பேருக்கு வேலை - அமைச்சர் தகவல்

அடுத்த 2 ஆண்டுகளில் 2.3 லட்சம்பேருக்கு வேலை வழங்கப்படும் என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

2021-ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் 4 லட்சம்பேருக்கு வேலை - அமைச்சர் தகவல்

நாட்டில் 22 ரயில்தடங்கள் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

New Delhi:

2021-ம் ஆண்டுக்குள் ரயில்வேயில் 4 லட்சம்பேருக்கு வேலை வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோயல் இவ்வாறு தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசிதாவது-

கடந்த ஆண்டு 1.51 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுத்தோம். ரயில்வேக்கு மொத்தம் 15.06 லட்சம் பணியிடங்கள் உள்ளன. 

இவற்றில் 12.23 லட்சம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். மீதம் 2.82 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனை அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிரப்பி விடுவோம். 

22 ரயில்வே தடங்கள் நீட்டிப்பு செய்யப்படும். மத்திய அரசு உயர் பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. ரயில்வே பணியிடங்களை நிரப்பும்போது இந்த இட ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்படும். 

இவ்வாறு அவர் கூறினார். 
 

.