Read in English
This Article is From Nov 15, 2019

கோவையில் ரயில் மோதி ஒரே கல்லூரியை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழப்பு!!

புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய மாணவர்கள், பின்னர் தண்டவாளத்தில் பேசிய படி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

மதுபோதையில் இருந்த மாணவர்கள் ரயிலை கவனிக்க தவறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். (Representational)

Coimbatore:

கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதன்கிழமையன்று இரவு கல்லூரி அருகே மது அருந்திய 5 மாணவர்கள், பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் பேசிய படி நடந்து சென்றுள்ளனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆலப்புழா - சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் மாணவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு இளைஞர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, உயிரிழந்த 4 பேரும், 21 முதல் 23 வயதுடையவர்கள் ஆவார்கள்.  ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என்றும், மதுபோதையில் தண்டவாளத்தில் நடந்த சென்றதே விபத்திற்கு  காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 


 

Advertisement
Advertisement