This Article is From Dec 17, 2019

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பம்: நித்யானந்தா

ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்டேன். கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் சற்று ஆவேசமாகப் பேசி நித்யானந்தா சவால் விடுத்தார்.

Advertisement
இந்தியா Edited by

2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை - நித்யானந்தா

கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். 

குழந்தைக் கடத்தல், பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா, தினமும் சத்சங்கம் மூலம், பக்தர்களுக்கு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். 

அரசு சார்பில், “நித்தியானந்தா தலைமறைவாக இருக்கிறார்” என்று சொல்லப்பட்டாலும், தினம் ஒரு வீடியோவை ரிலீஸ் செய்து வருகிறார் அவர். அதில் தன்னைத் தேடுபவர்கள் பற்றியும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றியும் கேலி செய்கிறார். தொடர்ந்து, ‘ஆன்மிக சொற்பொழிவுகளை' ஆற்றி வருகிறார். 

இந்நிலையில் வழக்கம்போல் சமூக வலைத்தளத்தில் சொற்பொழிவாற்றிய நித்யானந்தா; 2003ஆம் ஆண்டு முதல் தான் சந்திக்காத குற்றப் பிரிவுகளே இல்லை. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தான் நிரபராதி என நிரூபித்துள்ளேன் என்று கூறியுள்ளாரே. 

Advertisement

மேலும், ஆன்மீகத் துறையில் தான் என்றோ தலைவனாகிவிட்டேன். கைலாசாவில் குடியுரிமை கோரி 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் சற்று ஆவேசமாகப் பேசி நித்யானந்தா சவால் விடுத்தார்.

இதனிடையே வரும் 18ஆம் தேதிக்குள் நித்யானந்தாவை கண்டுபிடிக்க பெங்களூரு காவல்துறைக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement