சீனாவில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு கத்தி குத்து! (Representational image)
Beijing: சீனாவில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் சுமார் 40 மாணவர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்புக் காவலர் கத்தியால் குத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்தது என்று அந்நாட்டு அரசு நடத்தும் சீனா டெய்லி ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
தாக்குதல் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிய வரும்.
கடந்த சில ஆண்டுகளாக சீனாவின் பல்வேறு பகுதிகளிலும், அதிருப்தியடைந்த மக்கள் கத்தியால் குத்துவது தொடர்ந்து நடந்து வருவதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்கள் பெரும்பாலும் மழலையர் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவற்றையே குறிவைப்பதாக பிடிஐ தெரிவிக்கிறது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)