This Article is From Oct 18, 2018

தென்னிந்திய விமான நிலையங்களில் 40 ஆயிரம் மரக்கன்றுகள்

சுவச் பாரத் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் மற்றும் மூலிகைச் செடிகளை விமான போக்குவரத்து ஆணையம் நட்டுள்ளது

தென்னிந்திய விமான நிலையங்களில் 40 ஆயிரம் மரக்கன்றுகள்

21 விமான நிலையங்களில் மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளன

Chennai:

மத்திய அரசின் சுவச் பாரத் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு நிறுவனங்களில் மூலிகை செடிகள் நடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தென்னிந்தியாவில் இருக்கும் 21 விமான நிலையங்களில் மூலிகை செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நடுவதற்கு விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது.

இதன்படி தேசிய ஆயுர்வேத தினமான நேற்று சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. தென்னிந்தியாவில் உள்ள 21 விமான நிலைய வளாகங்களில் காலை 10 மணி முதல் 10.05-க்கு உள்ளாக 40 ஆயிரம் மரக்கன்று, மூலிகை செடிகள் நடப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தளவில்லை மீனம்பாக்கம், போரூர் ரேடார் நிலையம் மற்றும் விமான நிலையத்திற்கு சொந்தமான இடங்களில் நடப்பட்டுள்ளன.

இந்திய பாரம்பரிய மருத்துவத்தை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய ஆயுர்வேத, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் நாட்டு மருத்துவ அமைச்சகமான ஆயுஷ் அமைச்சகம் ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம்தேதியை தேசிய ஆயுர்வேத தினமாக அனுசரித்து வருகிறது.

.