This Article is From Jun 03, 2020

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து! 40 பேர் படுகாயம்

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ காட்சியில் ரசாயன தொழிற்சாலை வெடித்து  அதனால் அதிகமான கரும்புகை மேலே எழுகிறது. தொழிற்சாலையை சுற்றிலும், வயல்வெளி அமைந்திருப்பதை வீடியோ காட்சியில் காண முடிகிறது. 

குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் வெடிவிபத்து! 40 பேர் படுகாயம்

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்தில் 10  தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டு தீயணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

New Delhi:

குஜராத்தில் இன்று மாலை ரசாயன  தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 40 பேர் படுகாயம் அடைந்தனர்.  அவர்களில் சிலரது  நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

குஜராத்தின் தஹேஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்தில் 10  தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டு தீயணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரசாயன தொழிற்சாலையை சுற்றிலும் உள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ காட்சியில் ரசாயன தொழிற்சாலை வெடித்து  அதனால் அதிகமான கரும்புகை மேலே எழுகிறது. தொழிற்சாலையை சுற்றிலும், வயல்வெளி அமைந்திருப்பதை வீடியோ காட்சியில் காண முடிகிறது. 

படுகாயம் அடைந்த அனைவரும் பரூச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்து ஏற்பட்ட பின்னர் அதற்கு அருகாமையில் உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ரசாயன ஆலை விபத்து தொடர்பாக வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 விபத்து ஏற்பட்ட தொழிற்சாலை மேஜர் யாஷஸ்வி என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த தொழிற்சாலையில் 15 வகையான ரசாயன பொருட்கள் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டு வருகிறது.

.