This Article is From Apr 21, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு; 46 பேர் டிஸ்சார்ஜ்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,520 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு; 46 பேர் டிஸ்சார்ஜ்!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 46 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1,520 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்தார். 

நேற்று 1,477 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 1,500-யை கடந்து கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,520-ஆக உயர்ந்துள்ளது. 

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. 

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, சுகாதாரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், 'கொரோனா நோய் குறித்த தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். கொரோனாவால் உயிரிழந்தவர்களை புதைப்பதால் கொரோனா பரவாது. 

உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது முறையாக கிருமி நாசினி மருந்துகளை தெளிக்கிறோம். மருத்துவர் ஒருவர் உள்பட 2 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். பலியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உள்ளது. சென்னையில் 18 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளை விட கொரோனா பாதிப்பை நாம் சிறப்பாக கையாண்டு வருகிறோம். கொரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 457 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.' என்று தெரிவித்தார்.

நேற்று ஒரேநாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இன்று அதன் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக 43 ஆக பதிவாகியுள்ளது. 
 

.