This Article is From Nov 28, 2018

‘சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள்!’- காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள், திய சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை, நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

‘சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள்!’- காவல்துறை அதிரடி நடவடிக்கை

சென்னையில் புதியதாக 437 சிசிடிவி கேமராக்கள், இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை, நகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

கீழ்ப்பாக்கத்தில் நடந்த இந்தத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆணையர் விஸ்வநாதன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘குற்றங்களைத் தடுப்பதிலும் குற்றங்களைக் குறைப்பதிலும் சிசிடிவி கேமராக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இதையொட்டி, சென்னையில் இன்று முதல் 437 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

நகரத்தின் முக்கிய சாலைகளைப் பொறுத்தவரை 60 சதவிகிதம் பகுதி சிசிடிவி கேமராக்களுக்குக் கீழ் வந்துள்ளன. பூந்தமல்லி நெடுஞ்சாலை முதல் கோயம்பேடு வரை சிசிடிவி கேமராக்கள், சீரான இடைவெளியில் பொறுத்தப்பட்டுள்ளன.

சீக்கிரமே நகரத்தின் 100 சதவிகித பொது இடங்களையும் சிசிடிவி-யின் கண்காணிப்புக் கீழ் கொண்டு வருவது தான் எங்கள் இலக்கு. அந்த இலக்கை தமிழக காவல் துறை சீக்கிரமே அடையும். கூடிய விரைவில் 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொறுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

.