Read in English
This Article is From Jun 18, 2018

கனடாவில் பிரபல கலைஞரின் ஓவியம் திருடப்படும் சி.சி.டி.வி காட்சி

கனடாவின், டொரன்டோவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பேங்ஸி என்ற பிரபல கலைஞரின் கிராஃபிட்டி படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது

Advertisement
விசித்திரம்

Highlights

  • பேங்ஸி என்ற கலைஞர் கிராஃபிட்டி ஓவியங்களுக்கு பிரபலமானவர்
  • இன்று வரை பேங்ஸி பற்றி எந்தத் தகவலும் இல்லை
  • 45,000 டாலர்கள் மதிப்பிலான அவரது ஓவியம் திருடப்பட்டது
Ottawa, Canada: கனடாவின், டொரன்டோவில், இங்கிலாந்தைச் சேர்ந்த பேங்ஸி என்ற பிரபல கலைஞரின் கிராஃபிட்டி படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சி நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த 45,000 டாலர் மதிப்பில்லான பேங்ஸி ஆர்ட் திருட்டு போனது. பேஸ்பால் தொப்பி அணிந்து வந்த ஒரு மனிதன் கண்காட்சி நடைபெற்ற இடத்திற்குள் நுழைந்து பேங்ஸி ஆர்டை எடுத்துக் கொண்டுச் செல்லும் காட்சி கண்கானிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட “டிராலி ஹன்டர்ஸ்” என்ற ஓவியம் கன்டாவின் டாலர் மதிப்பில் 45,000 டாலர் அமெரிக்க மதிப்பில் 34,000 டாலர் என கூறப்படுகிறது.

பேங்ஸி கலைப் ஓவியங்களின் கண்காட்சியை, அவரது முன்னால் மேலாளர் ஸ்டீவ் லாசாரிஸ் என்பவரால் நடத்தப்பட்டது.

  .  


Advertisement
இங்கு 80திற்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.ஓவியங்கள், ஸ்ரின் ப்ரிண்ட்ஸ், சிற்பங்கள் மற்றும் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. கலைஞர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு நிகழ்த்தப்படும் மாபெரும் பேங்ஸி ஆர்ட் கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த கண்காட்சி ஜுலை 11 வரை நடைபெறும்
Advertisement
Advertisement