This Article is From Jul 18, 2019

''தமிழ்நாட்டில் மாணவர்களே இல்லாத 45 பள்ளிகள் மூடப்படாது'' - தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் 12 ஆயிரம் கிராம பஞ்சாயத்துக்களில் இருக்கும் நூலகங்கள் பாதிப்பு அடைந்திருப்பதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என்றும் திமுக தரப்பில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

''தமிழ்நாட்டில் மாணவர்களே இல்லாத 45 பள்ளிகள் மூடப்படாது'' - தமிழக அரசு தகவல்

45 பள்ளிகளில் மாணவர்களே இல்லையென்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Chennai:

தமிழ்நாட்டில் மாணவர்களே இல்லாத 45 பள்ளிகள் மூடப்பட மாட்டது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையின் சட்டசபையில் தெரிவித்துள்ளார். 

சட்டசபையில் திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு, குறைவான மாணவர்கள் காரணமாக தமிழகத்தில் 1,248  பள்ளிகள் நிறுத்தப்பட்டு அவை நூலகங்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார். மேலும், திமுக ஆட்சிக் காலத்தின்போது அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 12 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளில் நூலகம் ஏற்படுத்தப்பட்டது. அவை மறு சீரமைக்கும் நிலையில் உள்ளன. அவற்றை தமிழக அரசு புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இதற்கு பதில் அளித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் வருகை மிகக் குறைவாக உள்ள 1,248 பள்ளிகளை நூலகமாக மாற்றும் திட்டம் இல்லை என்றார். 

45 பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்று தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன் தற்காலிகமாக அவற்றை நூலகங்களாக இயக்க முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் அங்கு மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.