அங்கு குளியலறையில் தன் சகோதரி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். (Representational)
New Delhi: கிழக்கு டெல்லியின் மந்தாவலி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்குள்ளேயே 45 வயதான பெண்ணின் உடல் காணப்பட்டது. மாண்டவாலி காவல் நிலையத்திற்கு 2.52 மணியளவில் பெண்ணொருவர் கடந்த இரண்டு நாட்களாக வீட்டை பூட்டி உள்ளேயே உள்ளதாக தகவல் வந்துள்ளது. தகவலைக் கூறியவர் பெண்ணின் சகோதரன் ஆவார்.
அவரது தங்கை வீட்டில் தனியாக வாழ்கிறார் என்றும் போன் செய்து பார்த்தும் போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த காவல்துறையினர் கதவு உள்புறமாக தாளிடப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். அந்தப் பெண்ணின் சகோதரர் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அங்கு குளியலறையில் தன் சகோதரி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடலின் வெளிப்புறத்தில் காயம் ஏதுமில்லை. சந்தேகத்திற்கு இடமாக ஏதும் இல்லை என்று க்ரைம் குழுவினர் தெரிவித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் கணவர் 5 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார் என்றும், அவருக்கு குழந்தை இல்லையென்றும் தனியாக வாழ்ந்து வருவதாக காவல் துறை அதிகாரி கூறினார்.
அவரது கணவரின் மரணத்திற்கு பின் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் அடிக்கடி இரத்த அழுத்தக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. எனினும், உடற்கூறாய்வுக்குப் பின் தான் உறுதி செய்ய முடியும் என்று அவர் கூறினார்.