Read in English
This Article is From Feb 08, 2019

''ஜம்மு காஷ்மீரில் 450 தீவிரவாதிகள் செயல்படுகின்றனர்'' - ராணுவம் தகவல்

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மட்டும் 191 இளைஞர்கள் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement
இந்தியா

தீவிரவாதிகளுக்கான உதவிகளை பாகிஸ்தான் செய்கிறது என்கிறது ராணுவம்

Udhampur:

ஜம்மு காஷ்மீரில் 450 தீவிரவாதிகள் செயல்பட்டு வருவதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

ஜம்மு காஷ்மீரின் பிர் பஞ்சால் பகுதியில்தான் தீவிரவாதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.சுமார் 350 முதல் 400 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும், பிர் பஞ்சாலின் தெற்கு பகுதியில் சுமார் 50 தீவிரவாதிகள் செயல்படுகின்றனர். 

அவர்களுக்கான உதவிகளை பாகிஸ்தான் செய்கிறது. இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 16 தீவிரவாத முகாம்கள் செயல்படுகின்றன. 

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 836 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொன்றுள்ளோம். அவர்களில் 490 பேர் பாகிஸ்தான் அல்லது வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

Advertisement

இளைஞர்களை தீவிரவாத குழுக்கள் அதிகளவு ஈர்த்து வருகின்றனர். இளைஞர்களின் பெற்றோரை நாங்கள சந்தித்து நிமையை அவர்களிடம் கூறுகிறோம். முடிந்தவரைக்கும் தீவிரவாத குழுக்களில் இளைஞர்கள் சேராமல் தடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் ராணுவம் செய்கிறது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Advertisement
Advertisement