பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
New Delhi: வடமாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் 800க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன. பாதை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டன.
டெல்லி நோக்கி வந்த 46 விமானங்கள் நள்ளிரவு வரை அருகிலுள்ள நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
இதுதொடர்பாக டெல்லி விமான நிலையம் தனது ட்வீட்டர் பதிவில், டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பட்டாலும், தரையிரங்கினாலும், கேட் III இல்லாத விமானங்கள் பாதிக்கப்படலாம்.
இதனால், மாற்றபட்ட விமான தகவல்களுக்கு பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நடைமுறையின்படி, CAT III Aல் பயிற்சி பெற்ற விமானிகள் குறைந்தபட்ச 200 மீட்டருக்கு தெளிவான பாதைஇருந்தால் மட்டுமே தங்கள் விமானங்களை தரையிறக்க முடியும், பயிற்சி பெறாதவர்கள் தெரிவுநிலை மேம்படும் வரை அல்லது வேறு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்படுவார்கள் அதுவரை காற்றில் பறக்க வேண்டும்.
டெல்லியில் இருந்து பெரிய விமான இடையூறுகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், வட இந்தியாவில் கடுமையான மூடுபனி காரணமாக டெல்லிக்கு மற்றும் அங்கிருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று 17 ரயில்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படுகின்றன என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, இன்று நகரில் லேசான மழை தூறலுடன் "கடுமையான குளிர் நிலைகள்" இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.