Read in English
This Article is From Jun 13, 2019

இரத்தத்தில் சர்க்கரை குறைவு: பீகாரில் 4 நாட்களில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!!

மக்களிடம் ஹைப்போ க்ளிசிமியா என்ற நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதுதான் குழந்தைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

பீகாரில் குழந்தைகளை சூரிய வெப்பத்தில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Muzaffarpur :

பீகாரில் கடந்த 4 நாட்களில் மட்டும் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இற்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்ததே காரணம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் ஹேப்போக்ளிசிமியா என்ற நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாததும் உயிரிழப்புக்கு காரணம் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். 

முசாபர்பூரில் உள்ள கெஜ்ரிவால் குழந்தைகள் மருத்துவமனையில் மொத்தம் 179 பேர் ஏ.இ.எஸ். வைரஸ் பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரத்தத்தில் சர்க்கரை குறைவு, அம்மை நோய் உள்ளிட்டவைகள் சேர்ந்தது ஏ.இ.எஸ். எனப்படும் Acute Encephalitis  Syndrome (AES) பாதிப்பு ஆகும். 

அதிக வெயில், வெப்பம், மழையின்மை காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குழந்தைகளின் உடலில் குறைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

பீகாரில் குழந்தைகளை சூரிய வெப்பத்தில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று பெற்றோர்களை மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் சர்க்கரை மற்றும் உப்பு கலந்த குடிநீரை வழங்குமாறும் பெற்றோர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். 

Advertisement