Madurai: மதுரை மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் என்னும் ஏரி அருகே 47 மயில்கள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மயில்களைப் பார்த்து கிராமத்து மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். உடல் கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பபட்டுள்ளது.
நெல் பயிர்களை மயில்கள் சாப்பிடுவதை தடுக்க விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார், அப்பகுதி வனசரக அதிகாரி எஸ்.ஆறுமகம்.
“மயில் பாதுக்காக்கப்பட்ட பறவையாக அறிவிக்கப்பட்டது. அதைக் கொன்றவர்கள் நிச்சயம் கைது செய்யப்பட்டு, 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறுவர் “ என்றார் அவர்.
மேலும், மதுரையை சுற்றியுள்ள பகுதியில் மயில்கள் அதிகமாக இருக்கும் என்றும், அவை வேட்டையாடப்படுவதால், அவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
மயிலை வாகனமாக கொண்டு முருகன் வீற்றிருக்கும் திருப்பரங்குன்றம் மலையில், மரங்கள், புதர்கள் இல்லாததால் அங்கும் மயில்களின் எண்ணிக்கை குறைதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.