This Article is From Aug 01, 2018

பெட்டி பெட்டியாக வெடி பொருட்கள் - மீண்டும் விடுதலை புலிகளா என அதிகாரிகள் அச்சம்

ஜூன் 25-ம் தேதி, 50 பெட்டிகளுக்கும் மேல் துப்பாக்கிகள், வெடி பொருட்கள் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன

Advertisement
தெற்கு Posted by

ராமேஸ்வரம் அருகே சேரன்கோட்டை கடல் பகுதியில், இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 5,600 ஜெலடிங் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளது காவல் துறை.

ரகசிய தகவல் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இவ்வளவு பெரிய அளவு வெடி பொருட்கள் பிடிபட்டிருப்பது, விடுதலைப் புலிகள் மீண்டும் இலங்கை அரசுக்கு எதிராக வேலையைத் தொடங்கி விட்டதா? என்ற கோணத்தில் யோசிக்க வைத்துள்ளதாக உளவுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

2009-ம் ஆண்டு மே மாதம் 25 ஆண்டு கால ஈழப் போர் முடிவுக்கு வந்ததாக, இலங்கை அரசு அறிவித்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இலங்கை தெரிவித்தது.

ஜூன் 25-ம் தேதி, 50 பெட்டிகளுக்கும் மேல் துப்பாக்கிகள், வெடி பொருட்கள் பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டன. தங்கச்சிமடம் பகுதியில் கிடைத்த இந்த பெட்டிகளில் 63 மெஷின் துப்பாகிகளும், 5 கன்னி வெடிகளும் இருந்தன. இந்நிலையில் இப்போது பிடிபட்ட வெடி பொருட்கள், விடுதலைப் புலிகள் மீண்டும் உருபெற்றுள்ளதா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement