தமிழகத்தில் இன்று 5,951 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு; 107 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,91,303 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எனினும், இன்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கையானது 6,998 ஆக உள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,32,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து, 52,128 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து 27வது நாளாக தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் குறைவாக தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 6,721 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் 1,270 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 1,27,949 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,11,955 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தொடர்ந்து, 13,371 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,623 ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 41,99,492 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.