This Article is From Jun 10, 2019

யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு; 5 பேர் கைது! - நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

கைது செய்யப்பட்டபோது, தேவையான எந்த சட்ட வழிகாட்டுதல்களையும் பின்பற்றவில்லை, எனவே இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என புகார் எழுந்துள்ளது.

செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா, அவரது இல்லத்தில் இருந்து அழைத்துச்செல்லப்பட்டார்.

New Delhi:

உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ள செய்தியாளர் பிரசாந்த் கனோஜியாவின் மனைவி, அவரை விடுவிக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எனது கணவர் கைது செய்யப்பட்டபோது, தேவையான எந்த சட்ட வழிகாட்டுதல்களையும் போலீசார் பின்பற்றவில்லை, எனவே இந்த கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என பிரசாந்த் கனோஜியாவின் மனைவி, ஜாகிஷ் அரோரா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அரோரா என்டிடிவியிடம் கூறியதாவது, நடந்த சம்பவங்கள் எனக்கு தெளிவாக நியாபகம் இல்லை. அவை அனைத்தும் 5 நிமிடத்தில் நிகழ்ந்தவையே. வீட்டிற்கு கீழே சென்ற பிரசாந்த் மீண்டும் திரும்பி வந்து, உடைகளை மாற்று வேண்டும் என்றும் 2 பேருடன் செல்ல வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, நேற்று இரவு காவல்நிலைய அதிகாரி தனது கணவருடன் பேச அனுமதி அளித்ததாகவும், அப்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து அரோராவின் வழக்கறிஞர் கூறும்போது, முதல் கட்ட தகவல் அறிக்கை, சட்டத்திற்கு புறம்பாக உள்ளது, அதில் வாரண்ட் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.

அவதூறு வழக்கிற்கு முதல்கட்ட தகவல் அறிக்கை தேவையில்லை. அவதூறு வழக்கிற்கு நீதிபதிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் அல்ல என்றும், முதல்கட்ட தகவல் அறிக்கை பிணையில் வெளிவருவது போன்றே உள்ளது என்று அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்றம் நாளை இந்த வழக்கை விசாரிக்க உள்ளது.

இதேபோல், யோகி ஆதித்யநாத் குறித்து பெண் பேசும் வீடியோவை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பியதை அடுத்து, அந்த சேனலின் தலைமையாசிரியர் ஈஷிகா சிங், செய்தி ஆசிரியர் அணுஜ் சுக்லா, ஆகியோரையும் உத்தரபிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

.