ஹைலைட்ஸ்
- உடல் எடை குறைக்க நினைத்தால் வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
- தவறான உணவு பழக்கத்தால் உடல் எடை அதிகரிக்கும்.
- உணவில் கட்டுப்பாட்டை பின்பற்றினால் உடல் எடை அதிகரிக்கும்.
நம்மிடம் இருக்கும் சில தவறான பழக்கங்கள் தான் நம் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் காரணியாக இருக்கிறது. குறிப்பாக உடல் எடை குறைக்க நினைத்த பிறகு நீங்கள் நிச்சயம் சில பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதேபோல சில பழக்கங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சரியான உணவு மற்றும் உறக்கம் இருக்குமானால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென்று அறிக. உடல் எடைக்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் உறக்கம் சீராக இல்லையென்றால் உடல் எடை தானாக அதிகரிக்கும். இதேபோல் வேறு என்னென்ன கெட்ட பழக்க வழக்கங்களால் உடல் எடை அதிகரிக்கிறது என்று பார்ப்போம்.
தவறான உணவுப்பழக்கம்:
வேலை பளு காரணமாக சில சமயங்களில் சாப்பிடாமல் சாப்பாட்டை தவற விட்டுவிடுவீர்கள். உணவு பழக்கம் தவறாக இருக்கும்போது உடல் எடை குறைய வாய்ப்பில்லை. அதனால், சரியான நேரத்தில் சாப்பாடு எடுத்து கொள்வதுதான் சிறந்தது.
உணவில் கட்டுப்பாடு தேவை:
நம் பணத்தை எப்படி பார்த்து பார்த்து செலவு செய்கிறோமோ அதேபோல நாம் தினமும் எவ்வளவு கலோரிகள் உள்ள உணவை சாப்பிடுகிறோம் என்றும் கணக்கு வைத்து கொள்வது அவசியம். உடல் எடை குறைக்க விரும்பினால், நீங்கள் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவது அவசியம்.
வீட்டு சாப்பாடே சிறந்தது:
நீங்கள் அடிக்கடி கடைகளில் சாப்பிடும்போது அந்த உணவில் எவ்வளவு புரதம், நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறதென்று உங்களுக்கு தெரியாது. ஒருவேளை நீங்கள் சாலட் சாப்பிட்டாலும் அதில் கூட ட்ரெஸ்ஸிங்காக சேர்க்கப்படும் ஆயில் உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும். இயற்கையான மற்றும் ஆர்கானிக் உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் சிறந்தது. முடிந்தவரை கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
உணவை அளவாக சாப்பிடுங்கள்:
உடல் எடையை விரைவில் குறைக்க நினைத்தால் உணவை அளவாக சாப்பிட வேண்டும். சிறிய தட்டு பயன்படுத்தலாம். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம். உங்கள் தட்டில் காய்கறிகள் நிரப்புங்கள். அத்துடன் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துகளை சமமாக சாப்பிடலாம்.
உறக்கம் மேம்பட வேண்டும்:
உங்கள் தூக்கத்தின் தரத்தை பொருத்துதான் உங்கள் உடல் எடையும் மாறும். தினசரி 7 முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியம். ஆழ்ந்த தூக்கம் இருந்தால் உங்களுக்கு பசி கட்டுப்பாட்டோடு இருக்கும். இரவு நேரத்தில் நீங்கள் நன்கு தூங்கி எழுந்தால் அடுத்த நாள் முழுவதும் நீங்கள் சுருசுருப்பாகவும், எனர்ஜியோடும் இருக்கும். மேலும் உங்கள் செரிமான மண்டலம் சீராக இயங்குகிறது.